Tuesday, March 1, 2022

சாயிநாதன் உரைக்கும் ஆத்மராமாயணமும் ஆத்ம மகாபாரதமும்

 ஓம் ஸ்ரீ சாயி ராம்..

நமது சாயி பகவான் தனது அருளுரைகளில் திரேதா யுகத்தில் நடைபெற்ற இராமயணத்தை நமது இதயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூட்சும இராமாயணத்துடன் ஒப்பிடும் பொழுது அதனை ஆத்மாராமாயணம் என்று கூறியுள்ளார்.

அதுபோல் துவாபர யுகத்தில் நடைபெற்ற மகாபாரதத்தை நமது இதயத்தில்ல் நடைபெறும் சூட்சும பாரதத்துடன் ஒப்பிடும் பொழுது ஆத்ம பாரதம் என்று கூறுகிறார்.

உதாரணத்தின் மூலம் இவற்றை மகாபாரத நிகழ்வுகளுடனும் இராமாயண நிகழ்வுகளுடனும் ஒப்பிட்டு விளக்கமளிக்கிறார்.

அஸ்தினாபுரத்தை நமது உடலுக்கு ஒப்பிடும்பொழுது, அஸ்தினாபுரம்  ஒன்பது முக்கிய வாசல்களைக் கொண்டிருந்தது போன்று மனித உடலும் ஒன்பது வாசல்களைத
 கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

மகாபாரதத்தில் அதர்மவழியில் சென்று மகாபாரத யுத்தத்துக்கு வழிவகுத்த கௌரவர்களையும்,  கௌரவர்கள் நூற்றுவரின் தந்தை திருதராஷ்டிரனையும் மனிதர்களை அதர்மவழிக்கு இட்டுச் சென்று  துயரத்திலாழ்த்தும் கட்டுப்பாடற்ற புலன்களுக்கும், பாண்டவராகள் ஐவரையும்  அவர்களின் தந்தையும் நீதிமானுமான பாண்டுவையும் நம்மைத் தர்ம வழியில் இட்டுச் செல்லும் புலனடக்கமுள்ள மனதுக்கும் ஒப்பிடுகிறார்.

திருதராஷ்டிரன் பிறவிக் குருடராகவும், தனது புத்திரர்கள் அநீதியானவழியில் நடப்பதை நன்கு ஆறிந்திருந்தும்கூட அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய போதிலும், கண்ணபிிரான் சமாதானத் தூதுவராாக அஸ்தினாபுரததுக்குச் சென்றபோது மாளிகை வாசல் வரை சென்று கண்ணபிரானைக் கட்டித்தழுவி வரவேற்ற அவரது மனநிலையை, மனிதரின் அடிமனதில் செயல்படும் நற்பண்புகளுக்கு அடையாளமாகவும் குறிப்பிடுகிறார்.

  மகாபாரதத்தில் கண்ணபிரான் நடத்திய இன்னுமொரு லீலையையும் சுவாமி எடுத்துரைத்துள்ளார்.

ஒருநாள் கண்ணபிரான்‌ பாமா, ருக்மணி,‌ஜாம்பவதி, திரௌபதி முதலியோருகாகு கரும்பு நறுக்கிக் கொடுத்தாராம்‌. அப்பொழுது எதிர்பாரத விதமாக கரும்பு நறுக்கப் பயன்படுத்திய. கத்தி மாயவனின் விரலை வெட்டி விடடதால் அவரது விரலில் காயமேற்பட்டு இரத்தம் சொட்டத் தொடங்கியது.
இதனைக் கண்ட பாமா, ருக்மணி, ஜாம்பவதி முதலியோர் பணிப்பெண்களை அழைக்கவும், காயத்தில்கட்டத் துணி எடுப்பதற்கும் சென்றனர்.

ஆனால் அருகிலிருந்த திரௌபதியோ தான் உடுத்தியிருந்த புடவையிலிருந்து உடனடியாக ஒரு துண்டைக் கிழித்து கண்ணபிரானின் விரலிலிருந்த காயத்தில் கட்டிக் குருதி வழிவதைத் தடுத்துவிட்டார்.

முக்காலமும் உணர்ந்தவரும் பிரபஞ்சத்தையே ஆட்டுவிப்பவருமான கண்ணபிரான்  திரௌபதிக்கு உரிய நேரத்தில் உதவுவதற்கு ஆடிய நாடகமல்லவா இது. 

திரௌபதி சுயநலமற்ற உள்ளத்துடன் கண்ணபிரானின் விரலிலேற்பட்ட காயத்தின் வேதனயைத் தனக்கே ஏற்பட்ட வேதனையாகக் கருதி உடனடியாகச் செயற்பட்டார்.

அவரின் சுயநலமற்ற பிறர் வேதனையைத் தனது வேதனையாகக் கருதிய செயல் இப் பரபஞ்ச நாதனின் உள்ளத்தை உருக்கி விட்டது. இதனாலல்லவா அஸ்தினாபுர அரச சபையில் துச்சாதனன் திரௌபதியின் துகிலை உரிய முற்பட்டபோது அவரது சேலையைக் கண்ணபிரான்‌ வளரச்செய்து துஷ்டனான துச்சாதனனைக் களைப்படையச் செய்து மயங்கிவிழச் செய்தார்.

இதன்மூலம் சுயநலமற்ற மனதுடன் பிறருக்கு ஏற்படும் துன்பத்தைத் தனது துன்பமாகப் பாவித்து உதவுபவர்களுக்குப் பலமடங்கு பலனளிப் பதாகத் தனது அருளுரையில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார் எமது சாயிக்கண்ணன்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...