Thursday, March 17, 2022

பரமனுடன் பக்தன் தொடர்பேற்படுத்தும் வழி.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

அன்பின் திருவுருவங்களே,

பகவான் ‌நமக்கு ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய தேகத்தின் அங்கங்களை அளித்துள்ளார். அவற்றின் மூலம் ஒலி, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐம்புலன்களை உணர்கிறோம்.

நமது ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் நல்வழியிலேயே செயல்பட வேண்டும்.

இறைவனுடைய நாமத்தை உச்சரித்தபடி நம்மாலியன்ற அளவு பிறருக்குச் சேவையாற்ற வேண்டும். நமது சேவைகளை சுயநலமற்றதாகவும் இறைவனுக்கு அர்ப்பணமாகவும் செய்யவேண்டும்.

 மனிதர்களாகிய நாம் இந்தச் சமுதாயத்தின் அங்கங்கள் என்பதை உணர்ந்து சமுதாயத்தின் பிற அங்கங்களான அனத்து உயிரினங்களுக்கும் பயன்படக்கூடியபடி பொதுநலத்துடன் செயல் புரிய வேண்டும். எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். மனதால் கூட எவருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது.

சமுதாயம் இந்த பிரக்ருதியின் அங்கம், பிரக்ருதி கடவுளின் அங்கம். இதன் மூலம், தனிப்பட்ட மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள அத்தியந்த உறவு பற்றிய உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம். 

உயிரற்ற ஜடங்களான தொலைபேசி போன்றவைக்கு இணைப்புகள் ஏற்படுத்த முடியுமென்றால்> மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே அறுக்கமுடியாத இணைப்பு இருப்பதை மறுக்க முடியுமா? 

தொலைபேசி போன்ற இணைப்புகள் எல்லாம் செயற்கையானவை. ஆனால் இறைவனுக்கும் பக்தர்களுக்கும் இடையேயான இணைப்பு இதயம் சம்பந்தப்பட்டது. 

தோலைபேசி இணைப்புக்களில் ஒன்று நம்பர் மூலம் அழைக்கும் முறை. அதனை யார் வேண்டுமானாலும் ஏற்றுப் பேசலாம். இரண்டாவது தனிப்பட்ட நபருக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. இவ்வழைப்பை நாம் அழைக்கும் நபர் மாத்திரமே எடுத்துப் பேச முடியும்.

அதைப்போல உங்களது இணைப்புகள் எல்லாம் நேரடியான இறைவனுடனான இணைப்பாக இருக்க வேண்டும். 

உங்களுக்கு இறைவன் வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டும் இருந்தால் இறைவனே நேரில் உங்களிடம் வந்து பேசுவார். 

நீங்கள் நம்பரைக் கொண்டு அழைப்பது போன்று பேசமுயன்றால், இறைவன் பதில் கூறமாட்டார். இங்கே நம்பர் கால் என்பது எதிர் மறையான எண்ணங்களாகும் ஆகவே எதிர் மறையான (நெகடிவ்) எண்ணங்களை விட்டு விட்டு நேர்மறையான (பாஸிட்டிவ்) எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் இறைவன் நேரடியாக நம் முன்னே தோன்றுவார். நம்முடன் பேசுவார். நாம் முன்செய்த கர்ம வினைகள் அனைத்தையும் அகற்றி மறுபிறவியற்ற பெறற்கரிய பெரும்பேற்றை அருள்வார்.

அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...