Thursday, March 10, 2022

அன்பின் மகத்துவம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

பகவான் தனது அருளுரைகள் அனைத்திலும் அன்பின் மகத்துவத்தைப்பற்றித் தொடர்ந்தும் கூறி வருகிறார்.

அன்புடன் கடவுளை வணங்கவேண்டும் என்று கூறும் எமது சாயிநாதன்  இந்த அன்புதான் உலகைக் காக்கிறது என்றும் பக்தர்கள் அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது என்றும் கூறுகிறார்.

பிறர் பரிகசித்தாலும் ஏளனம் செய்தாலும், அன்புடனே எப்பொழுதும் வாழவேண்டுமென்று தொடர்ந்தும் எடுத்துரைககும் பகவான், அன்பு செலுத்திப் பிறைரை மன்னித்து வாழ்வதன் சிறப்பைப்பற்றியும், . கோபத்தினால் கேடு விளையும் என்பதையும் வலியுறுத்தி, அன்புடன் வாழும்படியும்.  யாராவது துன்பம் செய்தாலும் அவர்கள்மீது கோபப்படக்கூடாது என்றும்் கூறுகிறார்.

"அன்புடன் நாளைத்தொடங்குங்கள்.
அன்புடன் நாள் முழுவதையும் கழியுங்கள்.
அன்பினால் நாள் முழுவதையும் நிறையுங்கள்.
அன்புடன் நாளை நிறைவு செய்யுங்கள்."
என்பதே எம்பெருமானின் தாரக மந்திரம்.

நமது வாழ்வில் நடைபெறும் அனைத்துமே நாம்  செய்த கர்ம வினைகளின்படியே நடைபெறுவதாகவும், நமக்கு எற்படும் இன்பதுன்பங்கள் அனைத்துக்கும் நாம் செய்த கர்மவினைகளே காரணமென்பதால் நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் தோல்விகளுக்கும் பிறரையோ கடவுளையோ நிந்திக்கக் கூடாதெனவும் தனது அருளுரைகளில் எம்பெருமான்‌ வலியுறுத்தி உளளார் .

எல்லாம் கடவுள் சங்கல்பப்படியே நடப்பதாகக் கூறும் பகவான் கடவுளை ஒரு தபால் காரருக்கு ஒப்பிட்டுள்ளார். நல்வினைக்குரிய நற்பலனையே ஒருவருக்குக் கடவுள் வழங்குவதாகவும் முன் செய்த தீவினைகளின் பயனே நமக்குத் துன்பமாக வந்து‌  சேருவதாகவும் பகவான் கூறுகிறார். 
.
முன்செய்த கர்மவினைகளின் பயனையே கடவுள் வழங்கூவதாகவும் முன்வினைகளின் தீயவிளைவுகளிலிருந்து மீட்சிபெற வேண்டுமெனில் நமது செயல்கள் எல்லாவற்றையும் கடவுளுக்கு அர்பணமாகச் செய்யவேண்டுமெனவும் அறிவுறுத்துகிறார். 

நம்மீது யாராவது பழி சொன்னாலும். அதையும் கடவுள் நமது நன்மைக்காகவே செய்கிறார் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். 

உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் பிரசாதமென்ற மனநிலையுடன் நாம் செயற்பட்டால் நல்வாழ்வு நிச்சயம் கிடைக்கும்.

அன்பபெனும் அமுதத்தினால் கோபம், பொறாமை, கஞ்சத்தனம், ஆணவம், சுயநலம் போன்ற அசுர குணங்களை அழித்துவிடும். எப்பொழுதும் எது நடந்தாலும் அது கடவுள் சங்கல்ப்பப்படி நமக்கு நன்மையளிப்பதாகவே நினைத்து இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். 
பஜனை செய்யவேண்டும். 
கடவுளின் நாமத்தை உச்சரிக்க வேண்டும்.பஜனை மிக முக்கியமானது. கடவுளின் திருப்பெயரை உச்சரிப்பதே பஜனையின் முக்கிய அம்சமாகும். பலருடன் சேர்ந்து பஜனை செய்யும்போது ஒருவராவது கடவுளின் மனதை உருகச் செய்துவிடுவார். பலர் ஒன்றுசேர்ந்து நாம ஜெபத்தில் ஈடுபடும்போது நற்பலன்லன் அதிகரிக்கிறது. 

அதிகாலையில் நகர சங்கீர்த்தனம் செய்யும்போது அதைக் கேட்டுக் கண்விழிப்பவர்கள் மனமகிழ்ச்சியடைவர். 

உலகம் அனைத்தும் நலமாக வாழ்ப் பிரார்த்திப்போம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...