Friday, March 11, 2022

சத்தியத்தைக் கடைப்பிடிப்பதே மனிதரின் கடமை.

ஓம் ஸ்ரீ சாயி ராம்

எப்பொழுதும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதே மனிதர்கள் அனைவரினதும் கடமையாகும் என்று பகவான் தனது அருளுரைகளில் வலியுறுத்தி வருகிறார்

நமது எண்ணமும், சொல்லும் செயலும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்றும் நினைப்பவற்றையே‌ சொல்லவேண்டுமென்றும் சொல்லியதையே செய்யவேண்டும்.என்றும் வலியுறுத்தி வருகிறார். 

மேலும் எண்ணங்கள் அனைத்தும் தூய்மையானவையாக இருக்க வேண்டும, அதனால் நம் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும். என்றும் அனைவரும் எப்பொழுதும் சத்தியத்தையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சொல்வது மாத்திரமன்றி சத்தியம் ஒருபோதும் மாறாதது என்றும் இடத்துக்கிடமோ காலத்துககுக் காலமோ சத்தியம்‌வேறுபடாதது என்றும் வலியுறுத்துகிறார்.

"அமெரிக்கச் சத்தியம், இந்தியச் சத்தியம், ஜப்பான் சத்தியம் என்று நாட்டுக்கு நாடு சத்தியம் வேறுபடாது. 
சத்தியம் என்றுமே நிரந்தரமானது. மாறாதது.சத்தியத்தின் வழியே நடக்கும் அனைவரின் வாழ்க்கையும் தூய்மையமானதாக இருக்கும். 

எப்பொழுதும் சத்தியத்தையே பேசவேண்டும். சத்தியம் ஒருபோதும் எவருக்குமே தீங்கு விளைவிக்காது. 

பொய்யே தீங்குகளுக்குக் காரணம்" என்றும் வலியுறுத்தியுள்ளார். 

எனவே அனைவரும் சத்தியத்தைக் கடைப்பிடிப்போம். இனிமையாகப் பேசுவோம். 

எவருடைய மனத்தையும் புண்படுத்தாமல் அனைவருக்கும் உதவியாக வாழ்வோம். உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...