பகவத் கீதையின் அடித்தளம் அருச்சுனன் விஷாட யோகம் என்று நமது சாயிக் கண்ணன் கூறுகிறார்.
பலமான அடித்தளம் அதாவது அத்திவாரத்தின் மேல் கட்டப்படும் கட்டிடம் தான் காலம் காலமாக நிலைத்திருக்கும்.
அதுபோலவே 5000 வருடங்களின் முன் அருச்சுனன் விஷாட யோகம் எனப்படும் பலமான அத்திவாரத்தின் மீது அமைந்துள்ளதால்தான் கீதை என்னும் பெரும் மாளிகை எழுப்பப்பட்டுள்ளதாகவும், ஏனைய யோகங்கள் கொண்ட கீதை அதனால்தான் அன்றிலிருந்து இன்றுவரை மாத்திரமன்றி இப்பிரபஞ்சம் உள்ளவரை நிலைத்திருந்து அனைத்தையும் வழிநடத்தவுள்ளது எனவும் சாயிக்கண்ணன் கூறுகிறார்.
விஷாட யோகமென்ற பலமான அடித்தளமுள்ள கீதை சன்னியாச யோகத்தில் முடிவடைவதாகக் கூறும் பகவான், விஷாட யோகத்தை விதைக்கும், அவ் விதையிலிருந்து உருவான மாபெரும் விருட்சத்துக்கு சன்னியாச யோகத்தையும் ஒப்பிட்டுள்ளார்.
விஷாட யோகத்துக்கும் சன்னியாச யோகத்துக்கும் இடையிலுள்ள ஏனைய யோகங்களனைத்தையும் கற்றோரும் கல்லாதோரும் தெளிவாகப்புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியுள்ளார்.
மேலும் இப் பிரபஞ்சத்தைப் பாலுக்கும் இறைவனைப் பால் முழுவதிலும் நீக்கமற நிறைந்துள்ள வெண்ணெய்க்கும் எம்பெருமான் ஒப்பிட்டுள்ளார்.
பாலைக் காய்ச்சி உறைமோரிட்டுத் தயிராக்கி, அத் தயிரைக் கடைவதன் மூலம் வெண்ணெயைப் பெறுவது போன்று யோகங்களெனப்படும் சாதனைகள்மூலமே பிரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனைக் காணும் மற்றும் இறைவனின் அருளை அனுபவிக்க முடியுமென்றும் நம்மை உய்விக்கக் கலியுகத்தில் அவதரித்து நம்மைத் தமது அருளமுதத்தைப் பருகி பிறவாநிலையை எய்தி அருளியுள்ள சாயி பகவான் பகர்ந்துள்ளார்.
ஓம் ஸ்ரீ சாயி ராம்
No comments:
Post a Comment