கலியுக அவதாரமும் நமது கண்கண்ட தெய்வமுமான பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்கள் தனது திருக்கரத்தால் அருளிய கீதா வாகினியிலும், அவரது அவதார நோக்கத்தின் வெளிப்பாடுகளில் அடங்கிய அருளுரைகளிலும் பகவத் கீதையின் பரிபூரணமான அர்த்தங்களைத் தற்போதைய வாழ்வுடன் சம்பந்தப்படுத்தும் வகையிலும், கல்வியறிவற்ற பாமரர்களுக்கும் விளங்கும் வகையிலும் மிகத் தெளிவாக அளித்த விளக்கமல்லவா கீதா வாகினி.
சுமார் 5000 ஆண்டுகளின் முன் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணபகவானாக அவதரித்தபோது அந்த யுகத்து மக்களுக்குப் புரியும் மொழியில், அவர்கள் வாழும் நிலமைக்கேற்ப நிகழ்த்திய கீதோபதேசத்தை, அதே கண்ணபிரான் கலியுகத்தில் சாயிபகவானாக அவதரித்து நாமறிந்த மொழிகளில் நாமனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய, நாமனைவரும் அறிந்த உதாரணங்களுடன் நமக்கு வழங்கிய பிரசாதமல்லவா நாம் தற்போது அனுபவிக்கும் கீதா வாகினி.
இக்கலியுக அவதாரம் நிகழும் வரை அருச்சுனனுக்கு சமஸ்கிருத மொழியில் வழங்கப்பட்ட கீதோபதேசத்தை சமஸ்கிருத மொழியறிந்த பண்டிதர்கள் தமது அறிவுக்கெட்டிய வகையில் தமது மொழியறிவுக்கேற்ப தமக்குப் புரிந்தவற்றேயே மக்களுக்குப் போதித்து வந்தனர்.
சமஸ்கிருத மொழியில் ஒவ்வொரு சொல்லும் சந்தர்ப்பத்துக்கேற்பவும் வசனத்துக்கேற்பவும் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. எனவே விளக்கங்களும் விளக்குபவர்களின் அறிவுக்கேற்ப வெவ்வேறாக இருந்தது.
விளக்கமளித்த பலர் தமது பெருமையைத் தககவைத்துக் கொள்ளும் வகையிலும் விளக்கங்களைத் திரிபு படுத்தியுள்ளனர்.
எல்லோரும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் பகவான் தனது கீதா வாகினியை நமக்கு அருளியுள்ளார்.
துவாபர யுகத்தில்த்தில் கண்ணபிரான் உபதேசித்த பகவத் கீதை 18 அத்தியாயங்களுடன் மொத்தம் சுமார் 700 சுலோகங்களைக் கொண்டது.
அதே கண்ணபிரான் தனது கலியுகத்தின் சாயிக் கண்ணன் அவதாரத்தின் போது 27 அத்தியாயங்களில் நம் அனைவருக்கும் ஏற்ற வகையிலும் புரியும்வகையிலும் கீதா வாகினியை அருளியுள்ளார்.
கீதோபதேசத்தின் முதலாவது அத்தியாயத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் வியாச பகவான் கூறியதாகச் சொல்லப்படும் அருச்சுனன் விஷாட யோகத்தை நமது சாயிநாதனும் தமது கீதா வாகினியின் முதலாவது அத்தியாயத்தின் நடுப்பகுதியில் குறிப்பிட்டுள்ளதுடன் அருச்சுனன் விஷாட யோகத்தின் விளக்கத்தையும் நமக்குத் தெளிவாக அருளி இருக்கிறார்
.(மீண்டும் தொடரும்).
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment