பகவான் தனது கீதை வாகினியின் முதலாவது அத்தியாயத்தில், கௌரவர்கள் என்ற பதம் அசுர குணம், அநீதி, அசத்வ. குணம் என்பவற்றுக்கும், பாண்டவர்கள் என்பதை தெய்வீகம், நீதி, சத்வகுணம் என்பவற்றுக்கு ஒப்பிடுகிறார்.
மேலும், ஒவ்வொரு மனிதனிலும் பாண்டவர்களுக்குரிய தெய்வீகத் தன்மை, நீதி, தர்ம நெறி, சாத்வீகம் என்ற தன்மைகளும், கௌரவர்களின் குணமான அசுர குணம், அநீதி, அசத்வம், அதர்ம எண்ணங்கள் காணப்படுவதாகவும் கூறுகிறார்.
பாரதப்போரில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் போன்று ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நீதிக்கும் அநீதிக்குமிடையிலும், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலும் யுத்தம் நடைபெறுவதாகவும், நீதி மற்றும் தர்ம வழியைப் பின்பற்றுபவர்களுடன் தான் இருப்பதாகவும் கூறுகிறார். அதாவது நீதியும் தர்மமும் இருக்குமிடத்திலேயே தான் இருப்பதாகவும் அதேவேளே தான் எங்கும் நிறைந்திருப்பதாகவும கூறியுள்ளார்
மேலும் "சத்யமேவ ஜெயதே" அதாவது எப்பொழுதும் சத்தியமே வெல்லும் என்றும் கூறுகிறார். சூரியனை மேகம் மறைப்பதுபோல் தர்மத்தை அதர்மம், சத்தியத்தை அசத்தியம் மறைப்பதுபோல் தோன்றினாலும் என்றும் சத்தியமே வெற்றிபெற்று நிலைத்து நிற்கும், வெற்றிபெறும் என்றும் சொல்கிறார்.
உண்மைக்கும் சத்தியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
சத்தியம் காலத்தால் அழியாதது, மாறாதது என்றும் உண்மை காலத்துக்கேற்ப மாறக்கூடியது என்றும் கூறுகிறார்.
அதாவது நமது உடல் உண்மையல்ல, நிலையானதல்ல, உலகில் பிறந்த அனைத்துமே உயிர் பிரிந்தவுடன் அழிந்துவிடுமென்பதையும், உடலில் இருக்கும் ஆன்மாவே நிலையானது என்றும், உடலின் இயக்கத்துக்குக் காரணமான ஆன்மா உடலைவிட்டு நீங்கியவுடன் உடல் இயங்காதென்றும் உடல் அழிந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கண்ணபிரான் அருச்சுனனிடம், " உன்னை ஆரம்பத்தில் குழந்தை என்றனர், பின்னர் இளைஞன் என்றனர், இரண்டுமே உண்மை. ஆனால் சத்தியமல்ல என்றும், "உனது இளம்பராயத்து உடல் தற்போது எங்கே?" என்றும் "உடல் காலம் செல்லச் செல்ல உருமாற்றமடைகிறது, இளைஞனாக இருந்த நீ தற்போது வில்லேந்தி நிற்பது உண்ம, அழியாத உனது ஆத்மாவே சத்தியம்" என்றும் கூறியுள்ளார்.
அதற்கு அருச்சுனன் "பரந்தாமா, தாத்தா பீஷ்மர், குரு துரோணர் போன்றர் என முன்னே என்னை எதிர்த்துப் போராட வந்திருப்பது உண்மையில்லையா" என்று கேடடான்.
அதற்குக் கண்ணபிரான் அவர்கள் அனைவரினதும் ஆன்மாக்கள் இதற்கு முன் இருந்ததும், தற்போது இருப்பதும், இனியும் இருக்கப்போவதும் சத்தியம் என்றும் அவர்களது உடல்கள் தற்போது இருப்பதும் பின்னர் அழியப்போவதுமே உண்மை என்றும கூறியுள்ளார்.
அதாவது அழிவற்ற அனைத்துமே சத்தியம் என்றும் அழியக்கூடியவை இருப்பதாகத் தோன்றுவது உண்மையென்றும் கூறியுள்ளார்.
பிரபஞ்சமனைத்திலும் தானே நிலையானவர், சத்தியமானவர். அழிவற்றவர் என்றும் படைக்கப்பட்ட அனைத்தும் என்றோ ஒருநாள் அழிந்துவிடும் என்றும் எடுத்துரைக்கிறார்.
ஓம் ஸ்ரீ சாயி ராம்..
No comments:
Post a Comment