Wednesday, February 2, 2022

அஞ்ஞானமெனும் மாயையை வெல்ல உதவும் கீதை

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

கீதா வாகினியின் முதலாவது அத்தியாயத்தில், ஒருவர் எவ்வளவு அறிவாளியாகவோ, புத்தி ஜீவியாகவோ இருந்தாலும் மாயையால் ஏற்படும் அஞ்ஞானத்தின் மூலம் ஏற்படும் தடுமாற்றம், குழப்பநிலை என்பவற்றிலிருந்து தப்பிக்க முடியாது  என்று பகவான்  கூறியுள்ளார்.

மேலும் மாயையால் ஏற்படும் பற்று, பாசம், கோபம், ஆணவம் போன்றவற்றால் விளையும் துன்பத்திலிருந்து தப்புவதும் கடினம் என்றும் நமது கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு இவையே தடை என்றும்  பகவான் கூறுகிறார்.

பலகலைகளும் பேரறிவும் கொண்டவனும்,  கண்ணபிரானின் தோழனும் மைத்துனனுமான அருச்சுனனே பந்த பாசங்களுக்காட்பட்டுத் தனது கடமை எதுவெனறு அறிய முடியாமல் தடுமாறிவிட்டான்.

அவனே உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து‌ தானும் தனது ஆன்மாவும் ஒன்றென்ற‌‌ எண்ணத்தில் தடுமாறினான். தனது ஆன்மாவே உலகபந்தத்தின் அடிப்படை என்று குழப்பமடைந்தான். உடலியக்கம் மாத்திரமே ஆத்ம தர்மம் என்றும் குழம்பிவிட்டான்.

இப்படியான தவறான முடிவுகள் அருச்சுனனுக்கு மாத்திரமன்றி உலக மாந்தர் அனைவருக்கும் ஏற்படுவதாகவும்,  அதன் காரணமாகவே மனிதர்கள் பிறவிப் பிணியில் மீண்டும் மீண்டும் சிக்கித் தவிப்பதாகவும் பகவான் கூறியுள்ளார்.

கீதை மாயையெனும் அஞ்ஞானக் கடலைக் கடக்க உதவும் கருவியெனவும் பகவான் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும் தமக்குரிய கடமையை மனதில் பதித்து அக்கடமையெனும் தர்ம நியதிப்படி செயலாற்ற வேண்டுமென்றும் பகவான் வலியுறுத்துகிறார்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்..







No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...