Tuesday, February 22, 2022

வாழ்க்கை என்னும் பாரதப்போர்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

பர்த்தி நாதன் நமது வாழ்க்கையை மகாபாரதத்தின் நிகழ்வுகளுடன் துல்லியமாகத் தனது அருளுரைகளில் ஒப்பிட்டுள்ளார்.

ஒவ்வோரு மனிதனும் தான் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து சிறிதளவுகூடப் பிசகக் கூடாது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுளாளார்.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவருக்கும் கௌரவர்கள் நூற்றுவருக்குமிடையில் தொடர்ந்து பகைமையுணர்வு இருந்ததையும் இந்தப் பகைமையை அகற்ற வேண்டிய கடமையைக் கொண்டிருந்த அறவோரும் அறிஞர்களும தமக்குத் தாமே வகுத்துக்கொண்ட சுய தர்மம், சுய நீதிமுறைகளுக்கு மாத்திரமே முக்கியமளித்தது மாத்திரமன்றி இறைவன் வகுத்த  நீதியைக் கடைப்பிடிக்கத் தவறியதாலேயே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் பயங்கர யுத்தம் ஏற்பட்டுப் பேரழிவேற்பட்டதையும் பகவான் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

 அதுபோலவே ஒவ்வொரு மனிதனுள்ளும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகிய ஐந்து நற்குணங்களும் மதம், மாத்சர்யம், லோபம் மற்றும்‌ஆணவம், அகந்தை, பொறாமை, போட்டி ‌போன்ற பல நூறு கெட்ட குணங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் காரணம் ஐம்புலன்கள் தமது இச்சைப்படி‌ கட்டுப்பாடின்றி ‌ஓடுவதாகும்.

அதேவேளை ஐம்புலன்களும் மனதின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். மனம் ஆத்மாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

ஆனால் மனமென்பது புலன்கள் காட்டும தவறான வழிகளில் செல்ல ஆரம்பித்தால் மனித மனமும் உடலும் தாறுமாறான தவறான‌ பாதைகளில்தான் செல்லும்.
எனவே மனிதர்கள் அனைவருக்கும் மனக்கட்டுப்பாடு மிக அவசியம்.

மனது என்பது எண்ணங்கள் ஒருங்கிணைந்த ஒன்றென பகவான் தனது அருளுரைகளில் கூறி வருகிறார். மனித மனம் என்பதற்கு ஒரு துணியை உதாரணமாக பகவான் கூறுகிறார்.

இதனை விளக்குவதற்கெனத் தான் பயன்படுத்தும் கைக்குட்டையையே பகவான் உதாரணமாக்குகிறார். 

தனது கையிலிருக்கும் கைக்குட்டையைக் காண்பித்து, " இது‌ ஒரு கைக்குட்டை. இந்தக் கைக்குட்டை யிலிருந்து ஒவ்வொரு நூலாக அகற்றினால் கைக்கட்டை மறைந்துவிடும். அதேபோல மனம் என்பதிவிருந்து எண்ணங்களை ஒவ்வொன்றாக அகற்றினால் மனமென்பது மறைந்துவிடும்.
எனவே மனமென்பது ஒரு மாயமான தோற்றம்தான். எனவே எண்ணங்களைப் போக்கிவிட்டால் மனமென்பது தானாக மறைந்துவிடும். இப்படியாக எண்ணங்களைப் படிப்படியாக அழித்துவிட்டால் மனமும் இல்லாமல் போய்விடும்" என்று எடுத்துரைத்த உளளார்.

இங்கு கூறப்பட்ட ஐந்து நற்குணங்களுக்கும் பலநூறு தீய குணங்களுக்குமிடையே மனிதரின் மனதினுள் வாழாநாள் முழுவதும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாரதப்போர் 18‌ நாட்களே நடைபெற்றது. ஆனால் மனிதனுள் நற்குணங்களுககும் தீய குணங்களுக்குமிடையில் வாழ்நாள் முழுவதும் யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது.

பாரதப்போரில் கண்ணபிரான் பாண்டவர்கள் ஐவருக்கும் துணையாக இருந்த கௌரவர்களை‌அழித்து,‌ வெற்றியை அடையத் துணைபுரிந்தார்.

அதுபோல் நமது உள்ளத்தில்‌ நிகழும் போரில் இறைவன் துணையுடன் கெட்ட குணங்கள் அனைத்தையும் அழித்து நமது இப்பிறவியின் பேற்றை அடைவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...