Wednesday, February 23, 2022

கலியுகக் கண்ணன் சாயிநாதனின் விளக்கவுரைகள்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நன்நடத்தை என்பது ஒரு முக்கியமான பண்பாகும் என்பதை ‌வலியுறுத்தும்‌ நமது சாயிநாதன் ஒற்றுமையும்‌,  உயர்ந்த தியாகமனப்பான்மையும் நம்மிடையே இல்லாமல் போய் விட்டது என்றும்,  அதனால் எல்லா வளங்களும், எல்லா வகையான தர்மங்களும் பயனற்றுப் போய்விட்டதாகவுமா இதன்காரணமாக நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம் என்றும் கூறுகிறார்.

எனவே நாம் நம்மிடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும்‌, நாம் அனைவரும் ஒரே மானுட இனத்தைச் சேர்ந்தவர்கள் ‌என்ற காரணத்தால் மனிதர்கள் ‌தம்மில் மிருகத்தன்மைக்கு இடமளிக்கக் கூடாது என்றும், நாம் அனைவரும்‌ மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்
.
மேலும் தனது அருளுரைகளின்போது "அடுத்வருடைய துன்பங்களை நம்முடைய துன்பமாகவே பாவிக்கவேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நமது கஷ்டங்களாகவே கருதவேண்டும். மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை நாமும் அனுபவிக்கும்போதுதான் இந்த உண்மையை உணர்ந்துகொள்வோம். 

ஒன்றுபட்ட உணர்வைப் பெற்று, நம்மிடையே சகோதரத்துவத்தை வளர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும். சமுதாயத்திலுள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடித்துத் தீயவற்றை ஒதுக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். 

சமுதாயத்தில் நல்லதும்‌‌ கெட்டதும் லந்துதான் இருக்கிறது. இதனால் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நாம் நமது பகுத்தறிவைப் பயன்படுத்தி சமுதாயத்திலுள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்கித் தள்ளவேண்டும். 

யராவது நமக்குத் தீங்கு செய்தால்கூடப் பதிலுக்கு நாம் அவர்களுக்கு நல்லதையே செய்யவேண்டும். 

உதவி செய்தவர்களுக்குப் பிரதி உதவி செய்வதை விடத் துன்பம் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில்தான் நமக்குப் பெருமை இருக்கிறது. 

அனைவரும் தீமைசெய்வதன்மூலம் துன்பத்துக்கு ஆளாக்கியவர்களுக்கும் 
நன்மை செய்யவேண்டும் என்ற உயர்ந்த மன நிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டும். 

ஒருவர் இன்னொருவருக்கு‌ நன்மை‌ செய்வதும் துன்பத்தை ‌ஏற்படுத்துவதும்‌ அப்போது அவரவருக்கு இருக்கும் மனநிலையைப் பொறுத்தது.

அனைவருக்கும் நன்மை செய்வதே நமது கொள்கையாக இருக்கவேண்டும். நமது மனப்பான்மை எப்படி உள்ளதோ அப்படியே தான் விளைவும் இருக்கும். உணர்வுகள் நல்லவையாக இருந்தால்  செயல்களும் நல்லவையாகவே இருக்கும். 

மனதில் நல்லெண்ணம் இருந்தால் நினைப்பவை, செய்பவை எல்லாமே தானாகவே நல்லவைகளாக அமைந்துவிடும் தீய எண்ணங்கள் இருந்தால் செயல்களும் தீயவையாகவே இருக்கும்"
 
பகவவான் தனது அருளுரைகளில்‌ மகாபாரதத்தைப் பற்றிக் குறிபபிடும்  பொழுதும் மகாபாரத நிகழ்வுகள்  பற்றிய அடியாரகளின் சந்தேகங்களை நிவர்த்திப்பதற்கான‌ விளக்கவுரைகளிலும் கலியுகத்தின் சாயிக்கண்ணனான தானே துவாபர யுகத்தின்‌ கண்ணபிரான் என்பதை உறுதிப்படுத்துவதுடன் மகாபாரதத்தைத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.




No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...