Wednesday, February 16, 2022

ஓரே விடயத்தைப் பலமுறை கூறுவதைப் பற்றிய பகவானின் விளக்கம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

எம்பெருமானின் கருவியான அடியேன் சில விடயங்களைச் சுருக்கமாக் கூறாமல் விரிவாகவும் திரும்பத் திரும்பவும் கூறுவதாக உணர்கிறேன்.

திரும்பத்திரும்ப ஒரேவிடயத்தைக் கூறுவதைப்பற்றி நமது சாயி பகவான் தனது அருளுரையின்போது தெளிவாக விபரித்துள்ளார்.

அந்த அருளுரையின் விபரம் பின்வருமாறு உள்ளது:

"பல விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். சொல்வதை நன்றாகப் புரிந்து கொள்ளும் வரை சொன்னதைச் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆகவேண்டும். 

தினமும் காலையில் சாப்பிடுகிறோம். எனவே மாலையில் எதற்குச் சாப்பிடவேண்டுமென எவரும் நினைப்பதில்லை. ஏனென்றால் உண்ட உணவு ஜீரணமாகிவிட்டு மீண்டும் பசியெடுக்கும். எனவே மீண்டும் உண்ணவேண்டி ஏற்படுகிறது. 

ஒருமுறை கழுவிய முகத்தைச் சிறிது நேரத்தின்பின் மீண்டும் கழுவுகிறோம். 

அதுபோலத்தான் ஓருமுறை கேட்ட விடயத்தை மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுது அவ்விடயம் மனதில் நன்கு பதியும். 

சொல்லும் விடையங்கள் மனதில் நன்கு பதித்து, நடைமுறைப்படுத்தும் பொழுது மீண்டும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. 

ஆகவே ஒன்றைப் புரிந்துகொள்ளும் வரை சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லவேண்டி இருக்கிறது. 

சிறு குழந்தைகள் ஆரம்பத்தில் ஏ பி சீ டீ யைக் கற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக மில்க் (MILK) என்பற சொல்லை குழந்தை மீண்டும் மீண்டும் உச்சரித்தால்தான் அது அக்குழந்தையின் மனதில் பதிகிறது. அப்படி உச்சரித்த பின்னர் தான் அதன் பொருள் குழந்தைக்கு நன்கு விளங்குகிறது. ஆகவே கூறப்படும் விடயங்களின் அர்த்தம் புரியும் வரை, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லவேண்டும்.. பல விடயங்களைத் திரும்பத்திரும்பச் சொன்னபோதிலும் புதியன போன்றே தோன்றுவது இயற்கையான விடயமாகும். 

காயத்திரி மந்திரத்தைப் பற்றிப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒருமுறை சொல்வதற்கும் இன்னொருமுறை சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனால் சுவாமியின் வார்த்தைகளும் புதிதானவை போல் தோன்றும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் புதிதானவை என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இறைவன் நித்தியமானவர். அதுதான் தெய்வீகத்தின் தன்மை. அனைவரும் எப்பொழுதும் தெய்வீகத்தில் திளைத்திருக்க வேண்டும். என்றும். புதுப் பொலிவுடன் திகள வேண்டும். பழயதையும், முடிவடைந்தவற்றையும் மனதில் பதித்துக்கொண்டிருக்கக் கூடாது. 

எல்லோரும் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கவேண்டும். தெய்வீகத்தின் அடையாளமாக வாழவேண்டும். 

இறைவனுடன் ஒன்றியிருப்பதுதான் உண்மையான ஆனந்தம். HAPPINESS IS UNION WITH GOD. இறைவனுடன் ஒன்றிணையும்பொழுது மகிழ்ச்சி உண்டாகிறது. தெய்வீகச் சிந்தனையும் தெய்வீக அனுக்கிரகத்தையும்‌ பெற்றவர்களின் முகம் கலகலப்பாகவும், ஆனந்தமாகவும் காணப்படுகிறது. 

அவர்களின் முகத்தில் தெவீகக் களை தெரியும். தெய்வீக அம்சத்தின் கதிர் அவர்கள்மீது விழுந்திருப்பது தெளிவாகத் தெரியும்.

தெய்வத்தின் அருளுக்குப் பாத்திரமாகவேண்டுமெனில் தெய்வத்தின்மீது ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் இருக்கவேண்டும்.

 நம்பிக்கை, அன்பு ஆகிய இரண்டும் இருந்தால்தான் நாம் தெய்வீகத்தை அனுபவிக்கலாம்.  இந்த நம்பிக்கையும் அன்பும் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்கமுடியும். 

எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு வேண்டுமானாலும் போகலாம். 

காட்டிலோ, கிராமத்திலோ, நகரத்திலோ அல்லது கண்காணாத தேசத்திலோ, எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். 

உடலின் உள்ளேயும் வெளியேயும‌ மேலும், கீழும், உங்களைச் சுற்றிலும் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால், எங்கு வேண்டுமனாலும் இருக்கமுடியும், செல்லமுடியும். 

இப்படிபட்ட நல்ல உணர்வுகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

அன்பின் வடிவங்களே, தீய பழக்கங்கள் மற்றும் தீய செயல்களை விட்டு, நல்லெண்ணங்களை வளர்த்துக்கொண்டு, நற்செயல்களுக்கு இட்டுச்செல்லும் நல்லுணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்."

பகவான் தனது அருளுரைகளில் திருவாய்மலர்ந்தருளியுள்ள விடயங்களை நன்கு பரிந்துகொண்டு அவற்றை  நமது  வாழ்க்கையில் கடைப்பிடித்து இம்மையிலும் மறுமையிலும் உய்வடைவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.



No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...