ஓம் ஸ்ரீ சாயி ராம்.
மேலும சில இடங்களில் வைராக்கியம் எனப்படும் பற்றற்ற தன்மையைப் போற்றியுள்ளார்.
வழிபாட்டின் மூலம் ஆன்மீகப் பேரின்பத்தின் உச்ச நிலையை அடையமுடியும் என்பதையும் விரிவாக விளக்கியுள்ளார்..
யோகம் என்பது. இறைவனிடம் பூரண சரணாகதி அடைதல் என்பதே பகவானின் விளக்கம்.
நல்ல செயல்கள் மற்றும் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்தல் என்பவற்றை முக்கிய உண்மைகளாக அடிக்கோடிட்டுக் காடடியுள்ளார்.
துறவறநிலை விரும்பத்தக்கதான போதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே அதைப் பயிற்சி செய்ய முடியுமென்றும்,
இவ்வுலக வாழ்க்கை மற்றும் அதன் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் அவரவர் சுயதர்மத்தைப் பின்பற்றுவதே உயர்ந்த தர்மம் என்றும்,
எந்தச் செயல் முறை அங்கீகரிக்கப்பட்டது என்பதை முடிவு செய்யதைப்பற்றி மனிதரிடம் மனப்போராட்டமுள்ள போதிலும், தகுதியான செயல்களே அங்கீகரிக்கப் படுவதாகவும் பகவான் தனது அருளுரைகளில் கூறியள்ளார்.
"மன்மனா பவ மத்பக்தோ மத் யஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தி ப்ரதிஜாநே ப்ரியோ சி மே."
"ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷ-யயிஷ்யாமி மா"
என்ற சுலோகங்களில்
“ உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் என்மீதே நிலைநிறுத்துங்கள்.என்னிடம் பக்தியுடன் இருங்கள்.. என்னை வழிபடுங்கள் என்னிடம் சரணடையுங்கள். இதுவே எனது போதனை. இதுவே எனது அருள் மொழி.. இதுவே என்னை அடையும் வழி. இதுவே நான் உங்களுக்கு உணர்த்தும் உண்மை.
என்னைச் சரணடையும் அனைவரையும் கர்மவினைகளால் ஏற்படும் பாப புண்ணிய பலன்களிலிருந்து விடுவித்து மோட்சமாகிய நற்கதியருள்வேன்."
எனறு உறுதியளித்ததுள்ளார்.
மோட்சமென்பது உடலைத் துறத்தல் அல்லவென்றும் உடலாலும் உள்ளத்தாலும் தன்னிடம் சரணடைந்து செயல்கள் அனைத்தையும் பலனை எதிர்பார்க்காமல் திரிகரண சுத்தியுடனும், ஆற்றும் கர்ம பலன்கள் நல்லதாகவோ கெட்டதாகவோ இருந்தாலும் சம நோக்குடன் ஏற்று, இறைவனிடம் அர்ப்பணித்து வாழ்வைத் தொடர்வதே மோட்சமென்றும் பகவான் தனது அருளுரைகளில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
,
"
No comments:
Post a Comment