Thursday, February 17, 2022

சத்தியத்தின் வலிமை

  ஓம் ஸ்ரீ சாயி ராம்

நமது சாயிநாதன் அன்புடனும்‌ பயமின்றியும் நாம் வாழவேண்டியதன் ‌அவசியம் பற்றிப் பலமுறை தனது அருளுரைகளில் ‌திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
அவற்றின் சாரத்தை இன்று படித்து உணர்ந்து கொள்வோம்.

"தன்மீதும், கடவுளின்மீதும் திடமான நம்பிக்கை‌  வைத்திருக்கும் மனிதர்களால்  வாழ்க்கையில் எதைவேண்டுமானாலும் சாதித்து விடமுடியும்.

சத்தியத்தைக் கடைப்பிடித்து வாழும் ஒருவர் எதற்காகப் பயப்பட வேண்டும்? சத்தியம் எதைக்கண்டும் அஞ்சுவதில்லை.

வாய்மையே வெல்லும்‌ என்பது ஆன்றோர் கூற்று. 

சத்தியத்தைப் பின்பற்றுபவர்கள்  அன்பபைக் கடைப்பிடிப்பார்கள். என்னுடைய உரைகளில் சத்தியத்தையும், அன்பையும் உரையின் ஆரம்பத்திலும், முடிவிலும் வலியுறுத்திக் கூறிவருகிறேன். 

ஏனென்றால் சத்தியமும் அன்பும் ஒவ்வொருவரின் உயிருக்குச் சமமானவை. இவ்விரண்டும் மூச்சை உள்வாங்குவதும், வெளிவிடுவதும் போன்றவை. அன்பும் சத்தியமும் இல்லாமல் மனிதர்களால் உயிர் வாழ முடியாது. 

 சோ……ஹம்…., என்னும் ஹம்ச காயத்திரி‌மந்திரத்தை எடுத்துக்கொள்வோம்.

 சோ…. என்பது உள்வாங்கும் மூச்சு. அது சத்தியம். ஹம் என்பது வெளிவிடும் மூச்சு. அது எனவே ஒவ்வொரு சுவாசத்தின்போதும் சத்தியத்தை உள்வாங்கி அன்பை வெளிப்படுத்துங்கள். இளம்வயதிலிருந்தே சத்தியத்தையும் அன்பையும் வளர்த்துக் கொள்ளுங்கள். 

சத்தியத்தை நல்வழியில் பயன்படுத்தவேண்டும்.  

அந்நாளில் மன்னர் அரிச்சந்திரன்‌ சத்தியத்தைக் கடைப்பிடித்தார். பல‌ இன்னல்களின் மத்தியிலும் அவர் கடைப்பிடித்த சத்தியத்தின் பாதையிலிருந்து அவரை எந்தச் சகதியாலும் மாற்றமுடியவில்லை. எனவே  இறுதியில் சத்தியம் அவரை வெற்றியடையச் செய்தது.

யாராலும் அவரைச் சத்திய நெறியிலிருந்துமாற்ற முடியவில்லை. 

கலியுகத்தில் வாழும் நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் சத்தியத்தைக் கைவிடக்கூடாது.  மேற்கொள்ளும் கடமைகள் அனத்திலும் சத்தியம் உங்களுக்குத் துணையிருக்கும். எனவே சத்தியத்ததையும் அன்பையும் எப்படியான சூழ்நிலையிலும் கைவிடக் கூடாது.

சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை இந்த நான்கிலும் ஹிம்சை என்கிற வன்முறை சிறிதுகூட இல்லை. ஆகவே சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை இந்த நான்கையும் முழுமையாக அனுசரித்தால், அஹிம்சை என்கின்ற கோட்பாடு உங்களிடம் முழுமையாக வெளிப்படும். 

இவ்வுயரிய கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தவறுவதால்தான் உலகின் பல இடங்களில்வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. 

வன்முறையானது பத்மவியூகம் போன்று எங்கும் அனைவரையும் திணறடிக்கிறது. 

இறைவனின் சந்நிதானமே பயமற்ற இடம். இறைவனின் முன் பயம் முழுமையாக அகன்றுவிடுகிறது. நீங்களே இறைவன் என்பதை உணர்ந்து உங்களை அன்பினால் நிறைத்து விட்டால் உங்கள் எவருக்கும் பயமென்பதே ஏற்படாது."

ஓம் ஸ்ரீ சாயி ராம்.


No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...