Monday, February 14, 2022

பிரணவமந்திரம் பற்றிய பகவானின் விளக்கம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

பிரணவமந்திரமான ஓங்காரத்தைப் பற்றி நமது சாயிபகவான் தனது அருளுரைகளில் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஓம் என்பதற்கு அருள்விளக்கம் அளிக்கும்போது ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவத்தை மாத்திரமன்றி இம் மகத்துவமான மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டுமென்றும் விளக்கமளித்து அருளியுள்ளார்.


' ஓம் ' என்ற இரண்டு‌ எழுத்துக்களைக் கொண்டு‌ உச்சரிக்கும் போது அது ஒரு பதம் அதாவது சாதாரணச் சொல்லாக இருப்பதைக் குறிப்பிடும் எம்பிரான், இரண்டு எழுத்துக்களைக் கொண்டு பலகாலம் தாங்கள் உச்சரித்தும்கூட எதிர்பார்த்த பலன்கள்‌ கிடைக்காதது ஏன் எனறு‌ பல பக்தர்கள்  தன்னிடம் கேட்டதையும், அதற்குப் பதிலளிக்கும் போது, அ, உ, ம்‌‌ ஆகிய அகார உகார மகாரங்களைக் கொண்டதே பிரணவ மந்திரம் என்று ‌தான்‌ அவர்களுக்கு விளக்கமளித்ததையும், OM என்று உச்சரிக்காமல் AUM  என்று உச்சரித்தால் மாத்திரமே பிரணவ மந்திரம் பலனளிக்குமென்று கூறியருளியதையும், பிரணவத்தை AUM என்றே உச்சரிப்பது அவசியம் என்றும் தனது அருளுரைகளில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

இறைவன் மனிதனாக அவதாரமெடுக்கும்போது‌ அவரின் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அனைத்துமே சத்தியமாகும். அவரது செயல்கள் அனைத்துமே தர்மமாகும்.
அதனால்தானல்லவா நமது கலியுக அவதாரதாதின் பெயரே சத்தியம் என்று வழங்கப்படுகிறது.

எனவே எம்பெருமான் கூறிய‌ பிரணவ உச்சரிப்பும்
 சத்தியமானது.

 AUM என்ற பிரணவமே பிரபஞ்சத்தை நிறைத்திருப்பதுடன் பிரபஞ்சமே ஓங்காரத்தின் வடிவம் என்றும் எம்பிரான் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

ஒருநாள் பகவான் பிரசாந்தி  நிலையத்தில் மாணவர்கள் மத்தியில் தரிசனமளித்தபோது மாணவர்கள் கண்களை மூடியபடி பிரணவத்தை உச்சரித்தனர். அப்பொழுது ஒரு மாணவன் கண்களை மூடாமல் பகவானின் திருவுருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனிடம் பகவான், "பிரணவ சொரூபமே உங்கள் அனைவரின்‌முன் காட்சியளிப்பதை உணராமல் எல்லோரும் கண்களை மூடியபடி எதனைத் தரிசிக்கிறார்கள்" என்று 'தானேபிரணவஸ்வரூபம்‌'  என்பதைத் தனது திருவாயாலேயே அறிவித்ததும்‌  அனைவரும் அறிந்த விடயம்.

சாயிநாதன் தனது பிரணவ மந்திரம் பற்றிய அருளுரையில்

 " பிரணவம் எங்கும் நிறைந்தது.‌பிரணவம் இல்லாத இடமேயில்லை. பிரணவம் இல்லாத காலமென்றும் ஒன்றில்லை.‌ பிரணவமில்லாமல் ‌உயிர்வாழ்க்கையில்லை. பிரணவமில்லாத இடம் மனித உடலில் எதுவுமில்லை. பிரணவமே எல்லா ஒலிகளுக்கும் மூலம். பிரணவமே பிரமனின் சொரூபம்.
பிரணவமே ஓங்காரம். பிரம்மம் எங்கும் நிறைந்திருப்பது போல் பிரணவம் எங்கும் நிறைந்துள்ளது. அதேபோன்று ஆத்மாவும் பரப்பிரமத்தின் சொரூபமாகும். எனவே பிரணவமான ஓங்காரம், பரப்பிரம்ம், ஆத்மா என்பவை ஒன்றே அல்லாமல் வெவ்வேறானவையல்ல.' 

என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...