நாம் செய்யும் நல்ல மற்றும் தீய கர்மங்களின் பலன்களை என்றோ ஒருநாள் அனுபவித்தே தீரவேண்டும்.
அது மாற்ற முடியாத விதி
நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.
இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்படுகிறோம், சங்கடப்படுகிறோம், அவமானப்படுகிறோம். நமது கோழைத்தனமும் தன்னைத் தானே பழித்துக்குள்ளுதலும் தெய்வீகத் தன்மையல்ல.
நமது அடிப்படை இயல்பு தெய்வீகமாகும். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள புத்தியையும், வலிமையையும் வைத்துக்கொண்டு இறைவனுக்கு அர்ப்பணமாக நாம் அனைவரும் செயலாற்ற வேண்டும்.
நாமெல்லாம் பள்ளிக்கூடத்திலும் கல்லூரிகளிலும் படிக்கிறோம். ஒரு கால கட்டத்தில் அந்தப் படிப்புமுடிந்து, பட்டம்பெற்று வெளியுலகிற்குச் செல்கிறோம். பட்டம் பெற்றபின் கல்விச்சாலைகளும் கல்லூரிகளும் நமக்குத் தேவை இல்லை.
இதைப்போலவே உலகம், வாழ்க்கை பற்றிய உண்மையை நாம் உணர்ந்தவுடன் வீடுபேறு கிடைத்துவிடுகிறது. அதற்குப் பிறகு இந்த வாழ்க்கை நமக்குத் தேவையில்லாமல் போகிறது.
நாம் பட்டத்தைப் பெற்றே ஆகவேண்டும். நாம் தேர்ச்சி பெறுவதற்குரிய முயற்சியை முறையாக எடுத்துகொள்ள வேண்டும். நம்முடைய முயற்சியில் கவனம் செலுத்தாமல், இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தால் நமக்குப் பலன் ஏதும் கிடைக்காது.
நாம் நம்மைச் சீர்படுத்திக் கொண்டால் மட்டுமே நமக்கு வீடுபேறு கிடைக்கும்.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment