Saturday, December 26, 2020
உலகில் சத்தியம் தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகிய நற்குணங்களை வளர்க்கவந்த கலியுக அவதார புருஷரின் அருளுரைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளும் பெரும்பேறளித்த எம்பெருமானின் கமல மலர்ப் பாதங்களைப் பணிந்து அவரருளுடன் இத்தூய்மையான பணியை ஆரம்பிக்கிறேன்
அன்பின் திருவுருவங்களே, கிறிஸ்மஸ் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடியதையடுத்து வரப்போகும் புத்தாண்டைக் கோலாகலமாகக் கொண்டாடுவதற்குச் சாதி, மத, மொழி, நிற பேதமின்றி உலக மக்கள் அனைவரும் தயாராகிவருகின்றனர். உலக மக்கள் மத்தியில் பிறக்கப்போகும் 2021 ஆம் ஆண்டைக் குறிப்பிடும்போது கி.பி.2021 என்றே சொல்லப்படுகிறது.
யேசு கிறிஸ்து பிறப்பதன் முன்னரான ஆண்டுகளை கி.மு. என்றும் அவரது பிறப்பின் பின்னரான ஆண்டுகளை கி.பி. என்றும் குறிப்பிடப்படுவது கிறிஸ்து பிரானின் மகிமையை உலகம் எவ்வளவு முக்கியமானதாகக் கருதுகிறது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.
யேசுபிரானின் அவதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அனைவருடனும் அவதாரங்கள் பற்றிய உண்மைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
உலகில் வன்செயல்கள் பெருகி, நற்செயல்கள் அருகும்பொழுது, தர்மத்தையும் சாந்தியையும் சமாதானத்தையும் உலகில் நிலைநிறுத்துவதற்கெனவே அவதாரங்கள் நிகழ்கின்றன. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், பலராமர், கல்கி ஆகிய பத்து அவதாரங்களை பற்றியே பெரும்பாலும் பேசப்பட்டாலும் அவதாரங்கள் பலவென்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். அதே வேளை கௌதம புத்தர், யேசுபிரான், குருநானக், மகாவிரர் மற்றும் பல்வேறு அவதாரங்களையும், அவர்களது கொள்கைகளையும் பின்பற்றிப் பல பல மதங்கள் உலகங்கும் உருவாகியிருப்பதும் அனைவரும் நன்கறிந்த விடயம். ஆனால் உலகம் உருவாகியது முதல் நிகழ்ந்துள்ள எந்த ஒரு அவதாரத்தையும் நேரில் பார்த்தவர்கள் யாரும் தற்போது உலகில் இல்லை. திரேதா யுகத்தில் ராமபிரானும், துவாபர யுகத்தில் கண்ணபிரானும் அவதரித்ததும், கலியுகத்தில் புத்தபிரான், யேசு பிரான் மற்றும் பலர் அவதரித்து உலக மக்களை நல்வழிப்படுத்தியதும் அனைவரும் அறிந்ததாகும். சென்ற நூற்றாண்டில் பூவுலகில் அவதரித்து நம் கண்ணெதிரே வாழ்ந்து, உலகிலுள்ள மதங்கள் அனைத்தினதும் ஐக்கியத்தையும், உலகில் சத்தியம் தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகிய நற்குணங்களயும் வளர்த்த அவதார புருஷரின் அருளுரைகளை வெளியிடுவதற்குரிய பெரும்பேறளித்த எம்பெருமானின் கமல மலர்ப் பாதங்களைப் போற்றிப் பணிந்து அவரது அருளுரைகளில் சிலவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இப்பணிக்கென என்னைத் தெரிவு செய்த எம்பெருமானுக்கு எனது நன்றியையும் செலுத்துகிறேன்.உலகிலுள்ள அனைவரும் நலமுடன் வாழ எம்பெருமானை வேண்டிக்கொள்கிறேன். ஓம் ஸ்ரீ சர்வமத சம்மதாய நமஹ. ஓம் ஸ்ரீ சர்வஹிருதய வாசினே நமஹ. ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment