Friday, December 25, 2020
நமது உடலையே ஆலயமாகவும், நமது நல்லெண்ணங்கள், நல்வார்த்தைகள், நற்செயல்கள் என்பனவற்றை இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவோம்
அன்பின் வடிவங்களே,
நள்ளிரவு தேவாலயங்களுக்குச் சென்று உங்கள் ஆராதனைகளை முடித்தபின் இன்று மகிழ்சிகரமாக நத்தார் தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எனது உளங்கனிந்த நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றையதினம் உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியான கொண்டட்டாத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா எனச் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். வசதிபடைத்தவர்களின் வீடுகளில் புத்தாடை அணிந்து, விருந்தும், வாணவேடிக்கைகளும், வந்து போகும் உறவினர்களுடன் மகிழ்வுடன் களிப்பதும் நடைபபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், எத்தனையோ ஏழைகளின் இல்லங்களில் எளிமையாகவே அனைத்தும் நடைபெறுகின்றன. எத்தனையோ வறுமையில் வாடும் குடும்பங்களிலுள்ள குழந்தைகள் தாங்களும் புத்தாடை அணிந்து, அறுசுவை உணவுகளை உண்டு மகிழகவேண்டுமென ஆசைப்படுவதை வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தோர் எண்ணிப் பார்க்கிறார்களா என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இன்று பலதரப்பட்ட மக்கள் வீட்டில் விருந்தினர்களுடன் மகிழ்ந்திருப்பது மகிழ்ச்சியானது தான். அதே வேளை பலர் பாலன் பிறந்ததினத்தை வகை வகையான மதுவருந்தியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு துயரமான விடயம். எப்போதாவது எம்பெருமான் மதுவருந்துவதை ஆதரித்துள்ளாரா எனச் சிந்தித்துப் பாருங்கள். யேசு பிரான் ஏழைகள் துன்பப் படும்போது வசதிபடைத்தவர்கள், மற்றவர்களின் துன்பத்தைப் போக்க நினைக்காமல் தாம் மட்டும் மகிழ்ச்சியாக இருக்குமாறு கூறியிருக்கிறாரா என்பதையும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். குழந்தைகள் பலர் டிசம்பர் 24 ஆம் திகதி நள்ளிரவில் நத்தார் பப்பா வந்து தமக்குப் பரிசுப்பொருட்களைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதும் நமக்குத் தெரியும். எனவே யேசுபிரானின் அறிவுரைப்படி ஏங்கிகொண்டிருக்கும் குழந்தைகளின் ஆசையைத் தீர்க்க முன்வாருங்கள். ஒருமுறை யேசுபிரான் தேவாலயம் ஒன்றினுட் சென்று அங்கு தெய்வீகநோக்கமற்ற பல செயல்களளைப் புரிந்துகொண்டிருந்தவர்களளைத் திட்டடி, நமது தந்தையின் வதிவிடத்தை வியாபாரத் தலமாக்காதீர்கள் என்றதும், தெய்வ நம்பிக்கைக்குரியன தவிர்ந்த ஏனைய பொருட்களை அடித்து நொறுக்கி வீசியெறிந்ததும் யேசுபிரானின் வரலாற்றைப் படித்தவ்ர்களுக்குத் தெரியும். தேவாலாயங்களில் மட்டும் இறைவன் வசிப்பதில்லையென்பதையும் நமது உள்ளம் தான் இறைவனின் வசிப்பிடம் என்பதையும் அனைவரும் உணர்ந்து கொள்வோம். தேவன் வசிக்கும் ஆலயமான எமது உடலைப் புனிதமாக வைத்துக் கொள்வோம். தேவனுக்குப் பிடிக்காத் செயல்களைச் செய்யாமல், நல்லெண்ணங்களையும், நற்சொற்களை, நற்செயல்களையும் செய்து நமது உடலையே ஆலயமாகவும், நமது நல்லெண்ணங்கள், நல்வார்த்தைகள், நற்செயல்கள் என்பனவற்றை தேவனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவோம். அன்புதான் இன்ப ஊற்று, அன்புதான் உலக ஜோதி, அன்புதன் உலகமகா சக்தி என்ற தேவனின் வார்த்தைகளை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்துத் தேவனை மகிழ்விப்போம். நமக்காகத் திறந்திருக்கும் தேவனின் சாம்ராஜ்யத்தினுள் நுழைந்து எல்லாம் வல்ல பகவானுடன் இரண்டறக் கலப்போம். உலகம் முழுவதும் நலமாக வாழ வாழ்த்துவோம். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment