Thursday, December 24, 2020
நத்தார் தின நல்வாழ்த்தும் நற்செய்தியும்
அன்பின் திருவுருவங்களே,
உலக மக்கள் அனைவருக்கும் நத்தார்(கிறிஸ்மஸ்) நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நத்தார் தினத்தைக் கொண்டாடுவது மட்டுமன்றி இறைவனின் போதனைகளைத் தவறாமல் பின்பற்றுவோமென உறுதி செய்து கொள்வோம். இறைவன் கூறும் நல்வழிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் சாந்தி, சமாதானம், அமைதி, மகிழ்ச்சி, நல்வாழ்க்கை அனைத்தும் தானாகவே கிடைத்துவிடும்.
இன்று மனிதர்கள் நிம்மதியான வாழ்க்கைக்காக ஏங்குகிறார்கள். அமைதியும் நிம்மதியும் எங்கோ வெளியுலகில் தொலைவில் இருப்பதாக நினைத்து அவற்றைத் தேடுகிறார்கள். ஏங்குகிறார்கள். பொருட் செல்வதைத் தேடி ஓடுகிறார்கள். இறைவன் நமக்குள் நிறைத்துள்ள அருட் செல்வத்தை மறந்து விடுகிறார்கள். நம் உள்ளம் அமைதி நிறைைந்தது. இறைவனால் படைக்கப்பட்ட இந்த உடலினுள் இருக்கும் உயிர் இறைவனின் ஒரு சிறு துளி என்றும் மனிதர்கள் அனைவரும் தெய்வ அவதாரங்கள் என்பதையும் பலர் அறிந்திருந்தும், கடவுள் தமது சாயலாகவே நம்மைப் படைத்துள்ளாரென்பதும் தெரிந்திருந்தும், அதனை உணர்ந்து கொள்ளாமல் இறைவனை உடலுக்கு வெளியே தேடித் திரிகிறார்கள். நாம் தினமும் சுமார் 21,600 தடவை சுவாசிக்கிறோம். ஒவ்வொரு சுவாசமும் நான் இறைவன், நான் இறைவன் என்று உணர்த்துவதைப் பலர் உணர்வதில்லை. நமது செயல்கள் அனைத்தும் இறைவனுக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் என்பதையும் நினைவில் வைத்திருப்பதில்லை. பிரபஞ்சத்திலுள்ள பெயர்கள், உருவங்கள் அனைத்தும் இறைவனுடையதே என்பதையும், இறைவன் அன்பே உருவானவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர் என்பதையும் நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருப்போம்.
நாம் காண்பது அனைத்தும், நாம் அனுபவிப்பது அனைத்தும், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நமது எண்ணங்களின் பிரதிபலிப்பு, எதிரொலி, எதிர்வினை என்பதைப் புரிந்துகொண்டால் நாம் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்ல நடத்தையிலேயே ஈடுபடுவோம் என்பது நிச்சயம். அதன்பின் நமக்கு நடக்கும் அனைத்தும் நன்மையாகவே இருக்கும். அனைவரும் வளமுடன் வாழ எம்பெருமானைத் துதித்து விடைபெறுகிறேன். எனது பதிவுகளில் சொல்லப்பட்ட, சொல்லப்படும், சொல்லவுள்ள வார்த்தைகள் அனைத்தும் என்னுடையவையல்ல என்பதையும் இவை இறைவனால் அருளப்பட்ட வார்த்தைகள் என்பதையும் உங்கள் அனைவருக்கும் அறியத் தருவதில் ஆனந்தமடைகிறேன். அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment