Tuesday, December 22, 2020
மோகத்தைக் குறைத்து அனைவரையும் அன்புடன் நேசியுங்கள்.
அன்பின் திருவுருவங்களே,
பசியால் வாடுபவருக்கு உணவளியுங்கள். அணிய உடை இல்லாதவர்களுக்கு உடையைக் கொடுங்கள். எப்பொழுதும் கௌரவத்துடன் வாழுங்கள். தியாக குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தியாக குணமுள்ளவர்களே மனிதருள் மாணிக்கங்கள். மிகவும் புண்ணியம் செய்தவர்கள். மோட்சத்தைப் பெறுபவர்களும் அவர்களே. மோட்சம் என்பது மோகத்தை விட்டுவிடுவது தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மோகத்தைக் குறைத்து அனைவரையும் அன்புடன் நேசியுங்கள். அனைவருக்கும் உதவுங்கள். அன்பு, பண்பு, தியாகம், சத்தியம், நல்நடத்தை, அமைதி, அகிம்சை ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். இறைவனால் உங்களுக்குக் கொடுக்கப்படுவது அனைத்தும் உங்கள் நலனுக்கே என நம்புங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தைப் பரிபூரணமாக நம்பி வணங்குங்கள்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்.
SAMASTHA LOKHA SUKINOE BAVANTHU
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment