Monday, December 21, 2020
இறைவனின் படைப்பு
இந்த வலைப்பூ ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, உருவத்தையோ, பெயரையோ முன்வைத்து ஆரம்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு மனிதரும் தமது விருப்பத்துக்குரிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம். எந்த வடிவத்தையும் எந்தப் பெயரையும் பயன்படுத்தி வழிபடலாம். எல்லாப் பெயர்களும் வடிவங்களும் இப்பிரபஞ்சத்தைப் படைத்த ஒரே கடவுளையே குறிப்பிடுகின்றன.
இறைவனின் படைப்புக்களில் மிகச் சிறந்தது மனிதப் பிறவி. மனிதனால் மாத்திரமே பகுத்தறிவின் மூலம் எது சரி எது பிழை என்பதை அறிந்துகொள்ள முடியும். நமது ஒவ்வொரு செயலும் இறைவனை நோக்கி நாம் முன்னேறுவதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். நாம் பிறந்தது மிண்டும் மீண்டும் பிறந்து இறப்பப்பதற்கல்ல. இப்பிறவியின் மூலம் பிறவிப்பெருங்கடலின் மறு கரையை அடைந்து இறவனுடன் இரண்டறக் கலப்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். நாம் அனைவரும் இறைவனின் வடிவங்கள் என்பதை உணர்ந்து பாபத்தை வெறுத்துப், பகவானை விரும்பினால் நமது பிறவியின் பயனை அடைய முடியும்.
நதிகள் பலபெயர்களை கொண்டிருந்தாலும்அனைத்திலும் இருக்கும் நீர் ஒன்றுதான் என்பதையும் நதிகள் அனைத்தும் ஒரே கடலை நோக்கிப் பயணித்து அக்கடலுடனே கலக்கின்றன என்பதையும் உணர்ந்துக கொள்வோம்.
சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை, தியாகம் என்பவற்றைக் கடைப்பிடித்து, நமது எண்ணம், சொல், செயல் அகிய மூன்றையும் திரிகரண சுத்தியுடன் கடைப்பிடித்து இறைவனை அடைவோம். இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது தூய்மையான அன்பை மாத்திரமே.
நாம் இறைவனை நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவனை நம்மை நோக்கி நூறு அடிகள் அழைத்து வரும். எனவே இறைவனிடம் பூரணமாகச் சரணடைந்து, இறைவனின் பரிபூரண அருளைப்பெறுவதை நமது நோக்கமாகக் கொள்வோம்.
முழு உலகமும் நலமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம்.
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment