Thursday, November 17, 2022

சுவாமியின் அற்புதமான ஆசீர்வாதம்.

 ஓம் ஸ்ரீ சாயி ராம்

புத்திசுவாதீனமற்ற குழந்தையொன்றுடன் தாயொருவர் ஒருநாள் பிரசாந்தி நிலையத்துக்கு வந்திருந்தார்.
அவரைச் சுவாமி இன்டர்வியூவுக்கு அழைத்தார்.
 
இன்டர்வியூ அறையில் புத்தி சுவாதீனம் இல்லாத தனது ஆறு வயதுக் குழந்தையைத் தன் மடியில் வைத்திருந்தாள் அந்தத் தாய். 

அந்தக் குழந்தை அரற்றிக் கொண்டும், தன் தாயை அடித்துக்கொண்டும் அவள் தலைமுடியைப் பற்றி இழுத்துக்கொண்டும் இருந்தது. 

அவர்கள் இருவரையும் மிகக் கடுமையான பார்வையுடன் நோக்கி, *“இங்கிருந்து வெளியே போ !”* என்றார் சுவாமி.! உடனே அந்தத் தாய் வெளியே செல்வதற்கு எழுந்ததைப் பார்த்த சுவாமி, *“உன்னை வெளியே போகச் சொல்லவில்லை, நீ உட்கார்”* என்றார்!

அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் *அந்த நொடியிலிருந்து அந்தக் குழந்தை அமைதியானது.* அந்தக் குழந்தையிடம் இருந்த நோயைத்தான் சுவாமி வெளியே போகச் சொன்னார் போலும்!

சுவாமி அந்தத் தாயிடம் *“நீ என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவள்”* என்றும் , *“உன் குழந்தை உனக்குக் கிடைத்த ஒரு தனிப்பெரும் ஆசீர்வாதம்”* என்றும் கூறினார்.

சுவாமியின் அன்பும் அவர் அருள்மழையைப்‌பொழியும் விதமும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

சமஸ்த லோகா சுகினோ பந்து.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...