Friday, February 25, 2022

கலியக் கண்ணன் சாயி பகவான்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

மகாபாரதம் மற்றும் ராமாயணத்தைப் பற்றிய  அருளுரைகளின்‌ போதும் ஆத்மாராமயணம், ஆத்மா மகாபாரதம் என்பவை பற்றி நமது சாயிநாதன் குறிப்பிடுகிறார்.

ராமாயணம் மற்றும் மகாபாரத நிகழ்வுகளின்போது இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் பரம்பொருளே மனித உருவில் பூமியில் அவதரித்துத் தனது அவதார நோக்கங்களை நிறைவேற்றியுள்ளார்.

திரேதாயுகத்தில்  சிறி ராமனாக அவதரித்து அரக்கர்களை அழித்தது மாத்திரமன்றி வைகுண்டத்தில்    திக்குப் பாலகர்களாக இருந்து, சாபத்தின்காரணமாக இராவணனாகவும் கும்பகர்ணனாகவும் பூவுலகில் பிறவியெடுத்த ஜெய விஜயர்களுக்குச் சாபவிமோசனம் அளித்தார். 

மேலும் தனக்காகக் காத்திருந்த சபரி, அனுமன் மற்றும் ரிஷிகள், தபசிகள், பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலித்தார். 
ராமாவதாரத்தில் அவதார நோக்கத்தை நிறைவேற்றினாரே தவிர பால லீலைகளில் ஈடுபடவில்லை.

துவாபரயுகத்தில் கண்ணபிரானாக அவதரித்து அவதார நோக்கங்களை நிறைவேற்றியதுடன் பால லீலைகள் பல புரிந்தார். கோகுலத்தில் பால லீலைகள் புரிந்த கண்ணபிரான், மதுரா நகர் சென்றபின் பால லீலைகளைக் கைவிட்டு மகாபாரதத்தின் சூத்திரதாரியாகச் செயல்பட்டு அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டியதுடன் பூமாதாவின் வேண்டுகோளின்படி பூபாரத்தையும் தீர்த்தருளினார்.

துவாபரயுகத்தில் நடைபெற்ற மகாபாரதத்தில் அஸ்தினாபுரம் மையப் பகுதியாக விளங்கியது. அஸ்தினாபுரம்   அதன் சக்கரவர்த்தியான சந்தனு மகாராஜா,  தனது இராச்சியத்தையே தியாகம் செய்த பீஷ்மர்,  அதன்பின் அஸ்தினாபுர வாரிசுகளான பிறவியிலேயே கண்பார்வையற்ற திருதராஷ்டிரன் மற்றும் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட தருதராஷ்டிரனின தம்பியான பாண்டு ஆகியவர்களைச் சுற்றியும்,  திருதராஷ்டிரனின் 100 புதல்வர்களான கௌரவர்கள் மற்றும் பாண்டு புத்திரர்களான பஞ்சபாண்டவர்கள் பற்றியும் அவர்களின் வீரதீரச் செயல்கள் பற்றியும்  கௌரவர் தரப்பினருக்கும்  பாண்டவர் தரப்பினருக்குமிடையில்‌ நடைபெற்ற‌ மகாபாரதப்போர் பற்றியும், போரினால் ஏற்பட்ட‌பேரழிவுபற்றியும் இறுதியில்‌ அதர்மத்துக்குத் துணைபோன அனைவரும் அழிந்து தர்மம் நிலைநாட்டப்பட்டது பற்றியும் வியாசபெருமான் எழுதிய மகாபாரதச் சரித்திரத்திலிருந்து‌ம் வேறுபல நூல்களிலிருந்தும் நாம் அனைவரும் படித்தறிந்துள்ளோம்.

மகாபாரதத்தில் நாம் அறிந்த விடயங்கள் அனைத்தும் தகுந்த ஆதாரங்களின்றியும் சமஸ்கிருத மொழியிலிருந்து‌ பிறமோழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களிலிருந்தும் நாம் படித்தறிந்தோம். 

மொழிபெயர்ப்புச் செய்தவர்கள் தங்கள் மொழியறிவுக்கேற்ப மொழியாக்கம் செய்தமையால்‌ சம்பந்தப்பட்ட நூல்களுக்கிடையில் வேறுபாடுகளும் விளக்கமின்மையும் காணப்பட்டன.

பாரதப் போரில் ஆயுதமேந்தாமல் பங்குபற்றித் தர்மத்தை நிலைநாட்டிய கண்ணபிரான் பற்றியும் அவரது லீலைகள் பற்றியும் கற்றறிந்து இருக்கிறோம்.

திரேதா யுகத்தில் சிறீ‌ ராமபிரானாகவும், துவாபர யுகத்தில் கண்ணபிரானாகவும் அவதரித்து உலகை‌ இரட்சித்த அதே எம்பெருமான் கலியுகத்தில் சாயிக் கண்ணனாக, சாயிராமனாக, சாயிமகாதேவனாக நம்மத்தியிலே மனித உருவில் அவதரித்து, நம்முடன்‌ வாழ்ந்து, தனது அவதார‌மகிமையை‌ வெளிக்காட்டியது  மாத்திரமன்றி, கடந்த அவதாரங்களில் தான் நிகழ்த்திய லீலைகளையும் ‌அற்புதங்கள் அனைத்தையும் நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார். 

மேலும் ‌நமது‌ மனிதப்பிறவியின் நோக்கம் என்னவென்பதையும்,  மிக எளிதாக‌ இப்பிறவிப்‌பெருங்கடவைக் கடந்து பிறப்பு இறப்பற்ற‌ நிலையடைவதற்குரிய‌ வழிகளையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

சாயினாதனின் பேரருளால் நமக்குக் கடந்த காலத்தில் நடைபெற்ற அவதார‌லீலைகளைப் பற்றி ஆதாரபூர்வமாகத் தெரியவந்துள்ளதுடன் நமக்கென அருளுரைகள் பல வழங்கி‌ நம்மை உய்விக்க வழிவகுத்துள்ளார் நமது கண்கண்ட கலியுகத் தெய்வமான சத்திய சாயிபகவான்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ ‌சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...